பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே சாதனை படைத்த முதல் பெண் போட்டியாளர்
பிக் பாஸின் நிகழ்ச்சி வரலாற்றிலேயே பெண் போட்டியாளரான ஜாக்கிலின் ஒரு பெரும் சாதனை படைத்துள்ளார். இது பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ்
இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி கட்டத்தை எட்ட இன்னும் இருப்பது ஒரு மாதம் மட்டுமே. இதில் இந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி உள்ளனர்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்திற்கு வாரம் எவிக்ஷன் நடைபெறும். இதற்காக வாரத்தின் முதல் நாளில் நாமினேஷன் நடைபெறும். இந்த நிலையில் நாமினேஷனில் ஃப்ரீ பாஸ் வைத்துள்ள ரயான் தவிர மற்றைய 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளரான ஜாக்குலின் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிக் பாஸ் வரலாற்றில் தொடர்ச்சியாக 12 முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை ஜாக்குலின் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசனில் பாவனி ரெட்டி இதேபோன்று தொடர்ச்சியாக 12 வாரம் நாமினேட் ஆகி இருந்தார்.
தற்போது ஜாக்குலின் இதை முறியடிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்ல இந்தியாவில் நடைபெற்ற அனைத்து மொழிகளிலும் உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் அதிகபட்சமாக நாமினேஷனில் இருந்தவர் இந்தி பிக்பாஸை சேர்ந்த ரூபினா திலக் என்பவர் தான்.
இவர் 14-வது சீசனில் கலந்துகொண்டபோது ஒட்டுமொத்தமாக 15 வாரமும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஜாக்குலின் அதையும் தாண்டி அதிகமாக நாமினேஷன் பெற்ற போட்டியாளராக சாதனை படைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |