சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் படி கண்ணீருடன் வெளியேறிய 2 போட்டியாளர்கள் யார்?
இந்த வாரம் முடிவடைந்த சரிகமப மண்வாசனை சுற்றில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சரிகமப
சரிகமபவில் நெஞ்சம் மறப்பதில்லை சுற்று முடிவடைந்து இந்த வாரம் கிராமத்து மண்வாசனை சுற்று நடந்து முடிந்தது. கடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷன் நடைபெறவில்லை.
இந்த சீசனில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் அருமையானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் யார் டைடிலை வெல்ல போகிறார் என்பது இப்போது இருந்தே ஆர்வமாக பார்க்கபட்டு வருகின்றது.
குறிப்பாக இந்த சுற்றில் பங்கேற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள். இந்த நிலையில் இந்த வாரம் தக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற நான்கு போட்டியாளர்கள் நடுவர்களால் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இருவர் Safe செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஜே.பி ஹரணி மற்றும் வைதேகி என்ற இரண்டு போட்டியாளர்கள் இந்த போட்டியை விட்டு விலகி சென்றனர்.
இதன்போது நடுவர்கள் மற்றும் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |