சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைத்தண்டு சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே வாழை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களுமே அதிகமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றது.
குறிப்பாக வாழைத்தண்டுக்கு இயற்யைாகவே சிறுநீரை பெருக்கும் தன்மை காணப்படுகின்றது. மேலும் சிறுநீரக கற்களை விரைவில் கரைக்கவும் இது பெரிதும் துணைப்புரியும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினசரி உணவில் வாழைத்தண்டை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
அதில் நார்ச்த்து செறிந்து காணப்டுவதால், மலச்சிக்கல் மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் பெரிதும் உதவிசெய்கின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ள வாழைத்தண்டை கொண்டு அசத்தல் சவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
வாழைத்தண்டு - 1 கப்( வாழைத்தண்டை நார் இல்லாமல் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்)
உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
மல்லி விதைகள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைபிடியளவு
வரமிளகாய் - 5
உப்பை - தேவையான அளவு
வெல்லம் - 1 தே.கரண்டி
தேங்காய் - அரை கப்
எண்ணெய் - 1 தே.கரண்டி
புளி தண்ணீர் - 2
தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க தேவையபனவை
தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு - அரை தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தே.கரண்டி
உடைத்த வர மிளகாய் - 1
செய்முறை
முதலில் நார் எடுத்து சுத்தம் செய்து வாழைத்தண்டை 5 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் வர மிளகாய் ,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்னர் அதனை இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து வேகவைத்த வாழைத்தண்டு, தேங்காய் மற்றும் ஆறவைத்த பொருட்களுடன் உப்பு, வெல்லம் மற்றும் புளித்தண்ணீர் ஆகியவறறை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து நன்கு அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து சிறிது வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியையும் அதில் சேர்து தாளித்து எடுத்தால் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |