திருடி மாட்டிய கும்பல்- மூஞ்ச இனி எங்க வைச்சிப்பீங்க.. கிழித்து தொங்க விட்ட விஜய் சேதுபதி
பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு திருடி மாட்டிய போட்டியாளர்களை விஜய் சேதுபதி தரமாக சம்பவம் செய்து வைத்துள்ளார்.
பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர்.
இந்த இரு அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது.
இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
திருடி கும்பலாக அசிங்கப்பட்ட போட்டியாளர்கள்
இந்த நிலையில், இன்றைய தினம் கடந்த நாட்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்த குறும்புகள் குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
அதில், வீட்டிலுள்ள சாப்பாட்டையும் பிரியாணியையும் திருடி சாப்பிட்ட போட்டியாளர்கள் கும்பலாக சிக்கியுள்ளனர். இதனை கண்டுபிடிக்க விஜய் சேதுபதி திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்கும் பொழுது போட்டியாளர்களில் தர்ஷிகா “ சார் கொஞ்சமாக தான் சாப்பிட்டோம்..” என கூறினார், அதற்கு விஜய் சேதுபதி, “கொஞ்சம் எடுத்தாலும் நிறைய எடுத்தாலும் அதுவும் திருட்டு தான்..” என பதிலடிக் கொடுத்துள்ளார்.
அதேச சமயம், “ பிக்பாஸ் வீட்டில் நியாயம் பேசும் அருண் தற்போது உங்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வீர்கள்...” எனக் கலாய்த்துள்ளார்.
இப்படியாக மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. மூன்று ப்ரோமோக்களும் ரசிகர்களை பெரிதாக கவர நிலையில், இன்றைய தினம் எபிசோட் எப்படி இருக்குமோ என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |