21 வயதிலேயே பிக் பாஸில் சாச்சனா வாங்கிய சம்பளம் இவ்வளவா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சென்ற சாச்சனா நமிதாஸ் தற்போது பாக் நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றது. 60 நாட்களை கடந்து தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்குலின், செளந்தர்யா, மஞ்சரி, சாச்சனா, ஆனந்தி உள்பட மொத்தம் 12 பேர் இடம்பெற்று இருந்தனர்.
இதனடிப்படையில் இந்த வாரத்தின் இறுதியில் வாக்குகளின் அடிப்படையில் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.இந்த நிலையில் ஜாக்குலின் மற்றும் செளந்தர்யாவை சேவ் வெய்தார் விஜய் சேதுபதி. இதில் 10 பேர் எஞ்சி இருந்தனர்.
இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி செல்ல இருந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. இதில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கு முன்னர் வாக்குகள் குறைவாக இருந்தாலும் இவர் எலிமினேஷனில் இருந்து தப்பித்து வந்தார்.ஒரு வழியாக இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் இந்த பிக் பாஸ் வீட்டில் மொத்தமாக 60 நாட்கள் பயணம் செய்துள்ளார்.
இதற்கு இவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாகும். அந்த வகையில் 60 நாட்களுக்கு அவர் 12 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்த சீசனில் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கியவர் சாச்சனா தான்.விஜய் சேதுபதியின் மகளாக மகாராஜா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சாச்சனா, அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் எஸ்.கே.23 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |