Housemates-ஆல் உதாசினப்படுத்தப்படும் மஞ்சரி..எல்லை மீறும் வாக்குவாதம்- நடக்கப்போவது என்ன?
“மஞ்சரி கிண்டல் செய்வது தான் மற்றவர்களின் வேலையா?” என ஜாக்குலின் வாதத்தை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 கடந்த மாதம் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டு, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ- என்றி கொடுத்தார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வருவதாக கூறப்படுகின்றது. பிக்பாஸ் மீது மக்கள் மத்தியில் இருந்த விருப்பத்தை தற்போது இருப்பவர்கள் இல்லாமல் செய்து வருகிறார்கள்.
ஜாக்குலின் - மஞ்சரி இடையில் நடந்த பிரச்சினை
இந்த நிலையில், இன்றைய தினம் மஞ்சரி-ஜாக்குலின் இருவருக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில், ஜாக்குலின் மஞ்சரியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இதற்கு சௌந்தர்யா ஆதரவளித்ததுடன், மஞ்சரியை விமர்சனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஜாக்குலின், “ இந்த வீட்டில் இருப்பவர்கள் உங்களை கிண்டல் செய்வதற்காக தான் இருக்கிறார்களா?..” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
அதற்கு மஞ்சரி, “சௌந்தர்யா ஜாலியா பேசுறது போன்று எல்லாவிடயங்களிலும் பேசிவிட்டு செல்லாதீங்க...” என சௌந்தர்யாவை தாக்கி பேசுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |