எலிமினேஷனில் பிக்பாஸ் வைத்த சீக்ரெட் டாஸ்க்- சாச்சனா பொம்மை இல்லையா? வெளியேறுபவர் இவர்தான்
இன்றைய தினம் வெளியேறும் போகும் போட்டியாளரை டாஸ்க் கொடுத்து பிக்பாஸ் தெரிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
கடந்த சீசனில் எப்படி பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர்.
இந்த இரு அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்
இந்த நிலையில், இன்றைய தினம் எவிக்ஷனில் ஆர்.ஜே ஆனந்தி, ஜாக்குலின், ராயன், மஞ்சரி, அன்ஷிதா, சிவக்குமார், ரஞ்சித், சத்யா ஆகியோர் சிக்கியுள்ளனர்.
இவர்கள் ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, சிவக்குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு போட்டியாளரின் பெயர் இருக்காது எனவும் பிக்பாஸ் கூறியுள்ளார்.
போட்டியாளர்கள் களத்தில் இறங்கி தேடி ஆளுக்கு ஒரு பொம்மையை கையில் எடுத்துள்ளார். இன்றைய தினம் வெளியேறி விட்டார் எனக் கூறப்படும் சிவக்குமார் கையிலும் ஒரு பொம்மை உள்ளது. அப்படியாயின் இன்றைய தினம் சாச்சனா அல்லது ஆனந்தி தான் வெளியேறுவார் போல் உள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |