அது அறவே வேண்டாம்.. விஷ்ணு - பூர்ணிமா உறவிற்கு என்ட் கார்ட் போட்ட Freeze Task- நடந்தது என்ன?
விஷ்ணுவை பார்க்க உள்ளே வந்தவர்கள் பூர்ணிமா குறித்து மறைமுகமாக பேசியுள்ளனர்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள்
முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வான பிரீஷ் டாஸ்க் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று வலிமை பட பாடல் ஒலிக்கப்பட்டு பூர்ணிமாவின் அம்மா வரவழைக்கப்பட்டார்.
பின்னர் விஜய், விக்ரம், அர்ச்சனா இப்படி போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வீட்டினுள் அடுத்தடுத்து வந்தனர்.
போட்டியாளர்களுடன் கலாய்த்து விளையாட்டு விட்டு அறிவுரைகளையும் வழங்கி சென்றனர்.
விஷ்ணு- பூர்ணிமா உறவிற்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஷ்ணுவின் அக்கா மற்றும் அவரின் அம்மா ஆகிய இருவரும் விஷ்ணுவிற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
அதாவது, “ நீ யாருக்காகவும் விளையாட வேண்டாம். இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும். குறிப்பாக அது அறவே வேண்டாம்..” இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி விஷ்ணுவிற்கு ஏதோ கூறுவதற்கு முயற்சிகிறார்கள்.
பின்னர்“ மாயா - பூர்ணிமா ஆகிய இருவருக்குள் நீ எப்போதும் போக வேண்டாம்..” என கண்டிப்புடன் கூறி விட்டனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் வந்த பூர்ணிமா “ நாங்க பெருசா பேசுறது இல்லை...” என கூற, விஷ்ணுவின் அக்கா ஷாக்கில் முறைக்க ஆரம்பித்து விட்டார்.
இதனை பார்த்த பூர்ணிமா, “ மொறக்கீறாங்க.. அடிப்பாங்க போலயே..” என பேசியப்படி சிரித்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |