மெட்டிப்போட்டு காதலர் தினத்தைக் கொண்டாடிய கவிஞரின் மனைவி: படத்தை காப்பி அடித்ததாக கலாய்க்கும் நெட்டிசன்கள்
நேற்றைய தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்ட தினம் காதலர் தினம். இத்தினத்தில் பலரும் தங்களின் காதலை பல்வேறு வகையில் பல்வேறு பரிசுப் பொருட்களால் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் திரைதுறையிலும் பலர் தங்களின் காதலை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில் கவிஞரும், பிக்பாஸ் போட்டியாளருமான சினேகன் மற்றும் கன்னிகா ரவி காதலர் தினம் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினேகன்-கன்னிகா
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சைகளால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் கமல்ஹாசனுடன் கட்சியில் இணைந்துகொண்டார்.
பிறகு கமல்ஹாசன் தலைமையில் தான் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த கன்னிகாவை இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்.
சினேகனின் மனைவி கன்னிகா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண வீடு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
காதலர் தினக்கொண்டாட்டம்
நேற்றைய தினம் காதலர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடியிருந்த நிலையில், கன்னிகா தன்னுடைய கணவருக்கு காலில் மெட்டி அணிவித்து மகிழ்ந்த கன்னிகாவிற்கு சினேகன் காதலர் தின வாழ்த்துக்கள் கூறி தங்களுடைய ரசிகர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே எனப்பார்த்த போது தாமிரபரணி படத்தில் நதியா தனது கணவரான பிரபுவிற்கு மெட்டி அணிவித்தது போல இருக்கிறது என பலரும் கலாய்த்து வருகின்றனர்.