மொட்டை அடித்து ஷேவ் செய்யணும்! ஷிவினை அசிங்கப்படுத்திய அசீம்: கோபத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவினின் மேக்கப்பை கலைத்து வஞ்சம் தீர்த்த ராபர்ட் மாஸ்டரைத் தொடர்ந்து, தற்போது அசீம் பேசியுள்ளது ரசிகர்களிடையே கோபத்தை எழுப்பியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி என ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
இதில் இந்த வாரமும் பெண் போட்டியாளர் ஒருவரே வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது.
ஷிவினுக்கு நடந்தது என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ராஜகுடும்பம் டாஸ்கில், ஷிவின் ராணியாக இருந்த ரச்சிதாவின் உணவில் உப்பை அதிகமாக போட்டு கொடுத்துள்ளார்.
இதனால் பெரும் சண்டை ஆரம்பித்த நிலையில், இறுதியில் ஷிவினுக்கு ராபர்ட் மாஸ்டர் அவர் அணிந்திருந்த அணிகலன், மற்றும் அலங்காரத்தினைக் கலைக்க கோரினார். இந்த காட்சி வலைத்தளங்களில் வெளியாகி கோபத்தினை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அசீம் வெளியே அமர்ந்து கொண்டு ஷிவினுக்கு மொட்டை அடித்து ஷேவ் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளராக வலம்வரும் ஷிவினை இவ்வாறு அசிங்கப்படுத்தியுள்ளதை அவதானித்த ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து திட்டி வருகின்றனர்.
The act of shaving a woman’s hair in the olden days symbolically removes a part of their identity & attempts to control women.
— Raja ? (@whyrajawhy) November 18, 2022
My blood boils after #Azeem saying “#Shivin-ku motta adichi vidanum”
This lowlife shld be stripped naked & stoned in the public. ?#BiggBossTamil pic.twitter.com/65Luk1pQTD