ஏடிகேவின் பாடலுக்கு ஊர்க்கிழவியாகவே மாறி குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்!
பிக் பாஸ் சீசன் 6 ன் முக்கிய போட்டியாளராக இருந்த ஏடிகேவின் ஊர்க்கிழவி பாடலுக்கும் சூப்பராக சிவின் அவர்கள் குத்தாட்டம் போட்ட காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 வெற்றிக்கரமாக நிறைவு
பிரபல தொலைகாட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிப்பரப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்களாக இருப்பவர்கள், தன் திறமையை உலகிற்கு காட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் போட்டியாளர்களாக தெரிவுச் செய்யப்படுவார்கள்.
மேலும் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சும் இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பிக் பாஸ் சீசன் 6 மிகவும் வெற்றிக்கரமாக நிறைவடைந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 க்கு பலத்த எதிர்பார்ப்புடன் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீசன் 6 ல் சிவின், மைனா, ஏடிகே, ராம்,ஆயிஷா, ஜனனி, ரக்சிதா என முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அசீம் தான் டைட்டில் வின்னரை பட்டத்தை அடித்து சென்றுள்ளார்.
குத்தாட்டம் போடும் சிவின்
இந்த நிலையில் சிவினுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்தது, அசீம், தனலெட்சுமியை தவிர்த்து மற்றைய போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஏடிகேவை வெளியிலுள்ள ரசிகர்கள் எல்லோரும் இணைந்து “ஊர்க்கிழவி” என்ற பட்டப்பெயர் கொண்டு அழைத்தார்கள்.
இதனால் வெளியில் வந்தவுடன், ஊர்க்கிழவியை வைத்து ஒரு ரேப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் சமிபத்தினங்களுக்கு முன்னர் தான் வெளியான நிலையில், சிவின் அவர்கள் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த நடனத்தை பார்த்த நெட்டிசன்கள், “ சிவினுக்கு இந்த அளவு ஆட தெரியுமா?” என கலாய்த்து வருகிறார்கள்.