“கர்மா யாரையும் சும்மா விடாது”... கோபத்தில் கொந்தளித்த மீனா - நடந்தது என்ன?
நடிகை மீனா கர்மா யாரையும் சும்மா விடாது என பேட்டயில் கொபமாகவும் கவலையாகவும் பேசி உள்ளார்.
நடிகை மீனா
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தார்.
இதன் பின்னர் முன்னணி நாயகியாக உயர்ந்தார். 13 வயதிலேயே ஹீரோயினாக மாறிய மீனா, இதுவரை ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். இன்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மீனா 'சீக்ரெட் ஸ்டோரீஸ் ரோஸ்லின்' என்கிற இணையத்தொடரில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடர், பிப்ரவரி 27 ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தைரியமாக அனைத்து முடிவுகளையும் எடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மீனா.

இரண்டாம் திருமணம்
இந்த நிலையில் மீனா பேட்டி ஒன்றில் பேசிய விடயம் வைரலாகி வருகின்றது. அந்த பேட்டயில் மீனா 'சீக்ரெட் ஸ்டோரீஸ் ரோஸ்லின்' பற்றியும் தன்னுடைய இரண்டாம் திருமண வதந்தி பற்றியும் பேசி இருக்கிறார்.
மீனா பேசும் போது, பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நான் நடித்து இருந்தாலும் எனக்கு இந்த தொடரில் நடித்தது வித்தியாச உணர்வும் தைரியத்தைம் கொடுத்தது எனக்கு பிடித்து இருந்தது என கூறி உள்ளார்.
இதே பேட்டியில் தனக்கு வந்த இரண்டாம் திருமணம் குறித்தும் பேசி இருக்கறார். அதில் இப்போது வரைக்கும் எனது இரண்டாவது திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்பு இதுபோல பல வதந்திகள் வரும் அதையெல்லாம் என்னுடைய காதுக்கு வரவே வராது.

ஆனால், இப்போது அப்படி இல்லை ஒரு செய்தி வந்து விட்டால் போதும், அதே வகையில் பல செய்திகள் வருகிறது. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவளும் இது போன்ற செய்திகளை எல்லாம் பார்ப்பார் என்பதை யாரும் யோசித்து கூட பார்ப்பதில்லை.
அவர்கள் சொல்லும் விஷயத்தில் உண்மை இருந்தால் பரவாயில்லை. ஆனால், எதுவுமே தெரியாம நான் ஒரு நடிகை, பெண் என்பதால், கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதுகிறார்கள்.
இதைபார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாகவும், ஆத்திரமாகவும் இருக்கும். அந்த செய்தியில் உண்மை இருந்தால், எழுதுவதில் தவறு இல்லை. ஆமாம், உண்மைதான் என நானே சொல்லிவிடுவேன்.

ஆனால், அதில் உண்மை இல்லாத போது நேரில் பார்த்தது போல எழுதுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நான் கர்மாவை நம்புகிறேன், கர்மா அவர்களை சும்மாவிடாது. ஏன் என்றால், என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு என்ன செய்தார்கள், அதனால் அவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்பதை நான் என் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.
இதற்கு மேலும் அதை நான் பார்ப்பேன் என மீனா தன்னை பற்றி வந்த வதந்திக்கு பதில் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |