அரசல்புரசலாக வெளியான பிக்பாஸ் சீசன் 9 அப்டேட்.. எப்போது ஆரம்பம்?
பிக்பாஸ் சீசன் 9 கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட்டவுள்ள நிலையில், அதன் தொகுப்பாளரில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராகி வருகின்றது.
கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆண்டவர் என அழைக்கப்படும் கமல் ஒன்பதாவது சீசனை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது துவக்கம்?
இந்த நிலையில் விரைவில் பிக்பாஸின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. இம்முறை பிக்பாஸ் சீசனில் பிரபலங்கள் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வருகின்றது.
இதனிடையே இந்த சீசனில் பிக்பாஸில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், பிக்பாஸ் 9வது சீசன் பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. பிக்பாஸ் முதல் 3 சீசன்கள் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிந்துள்ளது. அதே போன்று கொரோனாவிற்கு பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது.
தற்போது 9வது சீசன் குறித்து என்ன தகவல் என்றால் இந்த புதிய சீசன் செப்டம்பர் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |