என்னைப் பற்றி நீ பேசு... என் Background பத்தி நீ பேசாத! ஒரு நிமிடத்தில் வனிதாவாக மாறிய ஜோவிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ராவை வனிதாவின் மகள் மரியாதை இல்லாமல் பேசி வெளுத்து வாங்கியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வனிதா மகள் ஜோவிகாவின் படிப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தலைப்பை விசித்ரா எடுத்துள்ளார்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜோவிகா என்னைப் பற்றி பேசு... நான் தான் விளையாட வந்திருக்கேன்... என்னோட Back Round பற்றி பேசாத... என்று படுபயங்கரமாக பேசி தெறிக்க விடடுள்ளார்.