திருமணத்தை வைத்துக் கொண்டு பிக்பாஸில் எண்ட்ரியாகும் பிரபல நடிகை... குஷியில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கயிருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் பிரபல டிவி தொகுப்பாளினியான ஜாக்குலின், சர்ச்சை நடிகை ரேகா நாயர், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகர் பிரித்திவிராஜ், கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடன இயக்குனர் தினேஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளிவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக நடித்த, பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சர்வைவர் நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு விரைவில் திருமணம் ஆக உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உண்மையா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |