குபீர்னு சிரிக்க வைத்த ஜனனி! கலவரமாக இருந்த பிக் பாஸ் வீட்டில் நொடியில் கேட்ட சிரிப்பு சத்தம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஜனனி பற்றி விக்ரமன் பேசியதும் அதற்கு ஜனனி அழுத நிலையில் கடைசியில் அவர் பேசிய விடஙங்கள் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
முதலில் அழுத ஜனனி பிறகு சிரித்தபடி அனைவரிடமும் பேசினார்.
நான் யாரையும் சார்ந்து விளையாடவில்லை. என்னை வைத்து யாரும் விவாதிக்க வேண்டாம்.

நான் விளையாடாமல் இருப்பதும், விளையாடுவதும் என் முடிவுதான். நான் தனியாக தான் விளையாட வந்தேன் என பேசினார்.
போட்டியாளர்களை குபீர்னு சிரிக்க வைத்த ஜனனி
அப்போது திடீரென ஜனனி, சிரிப்பை அடக்க முடியாமல் “சின்ன வயசுல இருந்து ஸ்கூல்ல நான் எவ்வளவோ பெரிய ஸ்போர்ட்ஸ் பிளேயர் தெரியுமா?
குளுக்கோஸ் குடிக்காமல் ஸ்போர்ட்ஸ்ல நிப்பேன். வெளில வாங்க, அவ்வளவோ ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கேன்.
நான் எடுத்து காட்டுறேன் என்று கூற அனைவருமே விழுந்து விழுந்து சிரித்துவிட்டனர்.
ஆரம்பத்தில் அழுது கொண்டே தொடங்கிய ஜனனி, கடைசியில் ஜாலியாக பேசி முடித்தது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.
#Janany Ambi Anniyan Remo Transformation Troll ???. Oscar award deserved. She has a big future in acting ?. #BiggBossTamil6 #BiggBoss6Tamil #BiggBossTamil #BiggBoss #Vikraman . pic.twitter.com/BODiXZKf0b
— siva (@winsiva1994) November 11, 2022