பிக்பாஸ் சீசன் 6ல் கமல்ஹாசன் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடி அதிகமாம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல், விரைவில் தொடங்க உள்ள ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.
பிக்பாஸ்
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது.
இந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 100 நாட்கள் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்.
வாரத்தின் இறுதிநாளில் கமல்ஹாசன் வரும் நிலையில், அந்த வாரத்தில் நடைபெற்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். தற்போது அக்டோபர் 2ம் தேதி ஆரம்பிக்கும் ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.

கமலின் சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகி வரும் நிலையில், தற்போது கமல்ஹாசன் இந்த சீசனுக்கு பெறும் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்க ரூ.55 கோடி சம்பளமாக வாங்கிய கமல்ஹாசன் தற்போது 6-வது சீசனுக்காக தனது சம்பளத்தை 20 கோடி உயர்த்தி உள்ளார்.
அதன்படி இந்த சீசனில் அவர் பங்கேற்க உள்ள 15 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 75 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
