வேட்டைக்கு ரெடியா? பிக்பாஸ் ப்ரொமோவில் கம்பீரமாக வந்த கமல்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ன் கமல் ப்ரொமோ காட்சியை பிரபல ரிவி தற்போது வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்துள்ளது.
இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் ரித்விதாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர் ஆனதோடு ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வென்றனர்.
வெளியான பிக்பாஸ் சீசன் 6 ப்ரொமோ
அக்டோபர் 2ம் தேதி சீசன் 6 தொடங்க இருக்கும் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் சில வெளிவந்த நிலையில், தற்போது பிக்பாஸ் குறித்த ப்ரொமோ வெளியாகியுள்ளது.