பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க
பொதுவாக சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி சாப்பிடும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம்.
பிரியாணி பிரியர்களுக்கு பெரும்பாலும் கத்த்ரிக்காய் கிரேவியும் பிடிக்கும். அப்படியும் கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் உங்க வீட்டில் இருந்தால் ஒரு முறை பெங்களூர் பாணியில் கத்தரிக்காய் குழம்பு செய்து கொடுங்கள்.
அப்புறம் அவர்களின் விருப்பப்பட்டடியலில் கத்திக்காய் முக்கிய இடம் பிடித்துவிடும். ஆரோக்கியம் நிறைந்த கத்திரிக்கா கிரேவியை அட்டகாசமான சுவையில் விரைவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது?
தேவையானப் பொருட்கள்
நறுக்கிய பெரிய கத்திரிக்காய் - 4
நறுக்கிய தக்காளி -2
நறுக்கிய வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
புளி-நெல்லிக்காய் அளவு(சூடான நீரில் ஊற வைத்தது)
கடுகு -1 தே.கரண்டி
மிளகு -1 தே.கரண்டி
நாட்டுச் சர்க்கரை -அரை தே.கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் -1/4 தே.கரண்டி
எண்ணெய் -2 தே.கரண்டி
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, 1/2 கப் அவவுக்கு சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயத்தை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நல்ல பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே போல் தக்காளியையும் போட்டு நன்றாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கி அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதே பாத்திதை்தில் ஒரு தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிவிட்டு அரைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
பின்னர் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறிவிட்டு நன்றாக வேகவிட வேண்டும்.
இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால், அவ்வளவுதான் அசத்தல் சுவையில் பெங்களூருர் கத்திரிக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |