பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்கில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் டேஞ்சர் ஜோனில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சோகத்தில் ரச்சிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், ரக்சிதாவை ஒருதலையாக காதலித்து அவர் பின்னே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் இருக்கும்போது, இந்த வாரம் தான் வெளியேறிவிடுவதாக ரச்சிதாவிடம் அடிக்கடி கூறிவந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறியுள்ளார் என்று தெரியவந்துள்ள நிலையில், ரச்சிதா இனிமேல் நிம்மதியாக பிக்பாஸ் வீட்டில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தனக்கு கேன்சர் இருப்பதாக கூறிய ராபர்ட் மாஸ்டர் வெளியே வந்ததும் மருத்துவமனைக்கு செல்வாரா என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.