எல்லைமீறி கட்டிப்பிடிக்க சென்ற ராபர்ட் மாஸ்டர்! கைகள் வெட்டப்படும் என கொந்தளித்த ரச்சிதா
பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா கைகள் வெட்டப்படும் என்ற வார்த்தையைக் கூறி அமைதியாக கண்டித்துள்ளார்.
எல்லை மீறும் ராபர்ட்
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நாள் முதல் தற்போது வரை ரச்சிதா மீது ஒரு கண்ணாக காணப்பட்டு வருகின்றார். ரச்சிதா இருக்கும் இடத்தையே சுற்றி சுற்றி வரும் ராபர்ட் மாஸ்டரை பலமுறை ரச்சிதா கண்டித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் முன்பு கூட மறைமுகமாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் ப்ரொபோஸ் செய்ய சென்ற நிலையில், குறுக்கே வந்து கமல் தடுத்தார்.
பின்பு தனலட்சுமியினால் இருவருக்கும் இடையே ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போதும் ராபர்ட் மாஸ்டருக்கு மரியாதையாகவே ரச்சிதா அட்வைஸ் செய்தார்.
இந்நிலையில், லவ் பண்றது போல நடிப்பிற்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடி என்று கெஞ்சிய ராபர்ட், தொடர்ந்து ரச்சிதாவை கட்டிப்பிடித்து கொஞ்சுவது போல கிட்ட நெருங்கியுள்ளார்.
உடனே சுதாரித்துக் கொண்ட ‘கைகள் வெட்டப்படும்’ என்று அமைதியாக கண்டித்துள்ளார். தன்னால் முடிந்த வரை ரச்சிதா மிகவும் அமைதியாகவே சென்றுள்ள நிலையில் ராபர்ட் மாஸ்டர் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்து வருகின்றார்.