ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு
பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி என ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ராஜகுடும்பம் டாஸ்கில், ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக ராபர்ட் கதறியழுதார். ரச்சிதா அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டும் அவர் ரச்சிதாவை சத்தம் போட்டுள்ளார்.
கதறியழுத ரச்சிதா
பின்பு ராபர்ட் மாஸ்டர் அவ்வாறு பேசியதால் ரச்சிதா கதறியழுதார். ராபர்ட் மாஸ்டர் செல்லமாக கொஞ்சி அவரை ஆறுதல் படுத்த முயற்சி செய்தார்... ஆனாலும் ரச்சிதா அழுதுகொண்டு தான் இருந்தார்.
இந்நிலையில் ரச்சிதாவின் அழுகைக்கு அவரது கணவர் தினேஷ் காரணத்தினை தெரிவித்துள்ளார். ரச்சிதா தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்ட நிலையில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரச்சிதா வந்து தன்னுடன் வாழ சம்மதம் கூறினால் சேர்ந்து வாழ்வோம் என்று கூறி வருகின்றார் தினேஷ்.
Rachita is a huge disappointment. She was in my top 5 a week ago and now, she's totally off track.#BiggBossTamil6 https://t.co/VP9srXQCRQ pic.twitter.com/fpQHmIQgRt
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 18, 2022
தினேஷ் வெளியிட்ட கருத்து
ஆரம்பத்திலிருந்தே மனைவி ரச்சிதாவிற்கு தனது, ஆதரவை தெரிவித்து வரும் தினேஷ் தற்போது வெளியிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது.
தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரச்சிதா அழுததைக் குறித்து ஸ்டோரி ஒன்றினை வைத்துள்ளார்.
ரச்சிதாவின் அழுகை அவரது கோபத்தை வெளிப்படாகவே இருக்கும் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ளும் படியாக விளக்கியுள்ளார்.
அவர் தனது பதிவில், ஒரு பெண் அழும் போது அது பொதுவாக ஒரு விஷயத்திற்கு மேலே இருக்காது... கோபத்தையும் உணர்ச்சியையும் அவள் நீண்ட காலமாக பதில் அளிப்பதற்காக தான் வைத்திருக்கிறாள் என்று கூறியிருக்கிறார்.