சத்தமில்லாமல் நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிக்பாஸ் ரித்விகா தன்னுடைய நீண்ட நாள் காதலரை கரம் பிடித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ரித்விகா
தமிழ் பிக் பாஸ் 2ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டவர் தான் ரித்விகா.
இவர், பரதேசி, மெட்ராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
மெட்ராஸ் திரைப்படம் ரித்விகாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்ததோடு திருப்புமுனை திரைப்படமாகவும் மாறியுள்ளது. இவர், கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை.
சத்தமே இல்லாமல் நடந்த நிச்சயம்
இந்த நிலையில், கடந்த ஆண்டு ரித்விகாவின் நடிப்பில் யாவரும் வல்லவரே, தீபாவளி போனஸ் என்ற படத்தில் நடித்தார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்விகா சமூக வலைத்தளங்களில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவிற்கு கேப்ஷனாக "கைத்தலம் பற்ற" என பதிவிட்டுள்ளார். ஆனால், மாப்பிள்ளை நடிகரா... நண்பரா... தொழிலதிபரா என எந்த விஷயத்தையும் ரித்விகா அதில் பதிவிடவில்லை.
நிச்சயம் நடந்து உள்ளதை மட்டும் போட்டு, மாப்பிள்ளை யார் என்பதை மறைமுகமாக வைத்திருந்தாலும், ரித்விகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதே சமயம், சமூக வலைத்தளங்களில் மாப்பிள்ளை அவருடைய நீண்ட நாள் நண்பர் என்றும் அவருடைய பெயர் வினோத் லக்ஷ்மணன் என்றும் கூறப்படுகிறது. நண்பர்களாக இருந்து, காதலர்களாக மாறி தற்போது தம்பதிகளாகியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |