ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மையாகவே மாறிய தமன்னா! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை தமன்னா வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை தமன்னா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா. கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த தமன்னாவுக்கு முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளம் ஒன்று உருவாகியது.
அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலும் நடித்துவிட்டார்.
இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலில் நடனமாடிய பிறகு 'ஸ்டிரி 2, ரெய்டு 2' படங்களிலும் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடினார்.
தமன்னாவிற்கு தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகள் வருகிறது. தற்போது தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'தி ராஜசாப்' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு நடனமாட தமன்னாவை அணுகி படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் நடிப்பில் கடைசியாக ஓடேலா 2 படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது Ranger, Vvan: Force of the Forrest மற்றும் ரோஹித் ஷெட்டியின் தலைப்பிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் தமன்னா அசத்தலான ட்ரெண்டிங் உடையில் மெழுகு சிலை போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |