Bigg Boss: சார் நான் வெளியே போறன்... திறக்கப்பட்ட பிக்பாஸ் கதவு! கொந்தளித்த விஜய்சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம் ரம்யா ஜோ வாக்குவாதம் செய்த நிலையில் பிக்பாஸ் கதவு திறக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் ஆதிரையும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக ரம்யா இருந்து வந்த நிலையில், கடந்த நாட்களில் விளையாடப்பட்ட டாஸ்க் விஜய் சேதுபதியை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ரம்யா தான் செய்யாததை செய்தேன் என்று சொல்றீங்க... வெளியே போறேன் என்று கூறினார். விஜய் சேதுபதி கெட்ட வார்த்தை பேச மட்டும் தெரியுதா? என்று கேள்வி எழுப்பினார்.
நீங்கள் தாராளமாக வெளியே செல்லலாம் என்று கூறியதோடு, பிக்பாஸ் கதவும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது தொகுப்பாளரிடமே வாக்குவாதம் செய்த ரம்யா ஜோ இன்று வெளியேறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |