சேவ் கேம் விளையாடியே பல இலட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராகிய பிரபலம்! இவருக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமியின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக் காலக்கட்டத்தில் பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த சீசன்களை விட மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த போட்டியாளர்களில் பிக் பாஸ் ஓட்டிங்கினால் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதில் ஜனனி, ஆயிஷா, தனலெட்சுமி, மணிகண்டன், ராபரட் மாஸ்டர், ரக்ஷிதா மகாலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளடங்குகின்றது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சேவ் கேம் விளையாடும் போட்டியாளராக பல வாரங்களாக குற்றஞ்சாற்றப்பட்ட ரக்ஷிதா மகாலட்சுமி நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவர் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர். இவரின் யதார்த்தமான நடிப்பால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார்.
14 வதாக வெளியேறிய போட்டியாளரின் சம்பளம்
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார். இவர் சுமார் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்கியிருப்பார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய முழு பங்களிப்பை போட்டு பிக் பாஸ் டாஸ்க்கில் விளையாடியிருந்தார் நிச்சயம் டைட்டில் வின்னராகியிருப்பார் என ரசிகர்கள் வட்டாரம் கவலை வெளியிட்டுள்ளது.