பிக் பாஸ் வீட்டில் கலைஞராக முயலும் பெண் போட்டியாளர்! கடுப்பான ஏடிகே... பரபரப்பான ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ரக்ஷிதா மகாலட்சுமி, அமுதவாணனுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் சுமார் 21 பிரபலங்கள் களமிறங்கியிருந்தார்கள்.
தொடர்ந்து இதில் கலந்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலங்களில் ரக்ஷிதா மகாலட்சுமிக்கு தான் அதிக பேன்ஸ் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாமல் சேவ் கேம் விளையாடு வருகிறார்.
இது குறித்து கமல் ஹாசன் பல தடவைகள் மேடையில் கூறியதும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து இவர் நேற்றைய தினம் சக போட்டியாளர்கள் முன்னிலையில் தனக்கு குழந்தையில்லையென அழுது புலம்பியுள்ளார்.
மேலும் தன்னுடைய அம்மா தான் தனக்கு குழந்தையென்றும் தெரிவித்துள்ளார்.
குத்தாட்டம் போடும் பெண் போட்டியாளர்
இன்றைய தினம் வெளிவந்த ப்ரோமோவில் அமுதவாணனுடன் சேர்ந்து 80 கள் நடிகை போன்று நடனமாடியுள்ளார்.
இதனால் கடுப்பான ஏடிகே அவர்கள் முன் அமர்ந்து அவர்கள் ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.