ஆறுதல் கூற வந்த ரச்சிதா அழவைத்த ராபர்ட் மாஸ்டர்! அப்படியென்ன சத்தம் போட்டார்?
பிக்பாஸ் வீட்டில் அருங்காட்சியகம், ராஜவம்சம் டாஸ்கில் இறுதியில் அழுத ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா ஆறுதல் கூற வந்த நிலையில், அவரை ராபர்ட் மாஸ்டர் அழ வைத்துள்ள அடுத்த ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
ரச்சிதாவை அழ வைத்த ராபர்ட் மாஸ்டர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், சண்டையும் அரங்கேறி வருகின்றது.
இந்த வாரம் ராஜகுடும்பம் மற்றும் அருங்காட்சியகமாக மாறியுள்ள பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸ் ரகசிய டாஸ்க் ஒன்றினை தளபதியான அசீமிற்கும், ராணியான ரச்சிதாவுக்கும் கொடுத்துள்ளார்.
தற்போது டாஸ்க் நிறைவு பெற்ற நிலையில், பிக்பாஸ் தான் கொடுத்திருந்த ரகசிய டாஸ்க்கினை சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த ராபர்ட் மாஸ்டர் ராணியாக தன்னுடன் இருந்த ரச்சிதாவின் ஏமாற்றத்தினை தாங்க முடியாமல் கண்கலங்கி அழுதுள்ளார்.
ராபர்ட் மாஸ்டருக்கு ஆறுதல் கூற வந்த ரச்சிதாவை தன்னிடம் யாரும் பேச வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பிய நிலையில், ரச்சிதாவும் கண்கலங்கியபடி வீட்டிற்குள் செல்லும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.