பிரியங்காவிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை! அடுத்தடுத்து பறிபோகும் ஆங்கரிங் வாய்ப்பு... இனி சூப்பர் சிங்கர் ஆங்கர் இவர்தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியால் தொகுப்பாளினி பிரியங்கா பல வாய்ப்புகளை பறிகொடுத்து வருவதால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று பிரியங்காவை சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இதனால் அவரினால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாத சூழலில் அவரின் வாய்ப்புகள் அனைத்தும் பறி போய் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கூடிய விரைவில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து சிவாங்கி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏற்கனவே பிரியங்காவின் பல நிகழ்ச்சிகளை மாகாபா தான் இப்போது தொகுத்து வழங்கி வருகின்றார்.
you may like this...