Bigg Boss: கம்ருதினை கைநீட்டி அடித்த பார்வதி... ரணகளமாகிய பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஆரம்பமாகிய நிலையில், கம்ருதின் பார்வதி இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதுவரை போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகின்றது.

இதில் முதல் டாஸ்க்கில் சுபிக்ஷா வெற்றிபெற்று 9 புள்ளிகள் எடுத்து முதல் டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது இரண்டாவது டாஸ்க் நடைபெறுகின்றது.
பார்வதி கம்ருதின் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. பார்வதி கம்ருதினை அடித்துள்ளார். இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற கம்ருதின் பார்வதி வைத்து பந்து கூடையை எட்டி உதைத்துள்ளார்.
இதுவரை ஒன்றாக சுற்றித்திரிந்த இவர்கள் தற்போது எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |