பல சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்த நிக்ஷன்.. 91 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் வாங்கிய சம்பளம் குறித்தான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 91 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் அன்னயா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
நிக்ஷன் சம்பள விவரங்கள்
இந்த நிலையில் கடந்த வாரம் நிறைவில் நிக்ஷன்- ரவீனா ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். அதில் நிக்ஷன் சில ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார்.
இசை கலைஞராக இருக்கும் நிக்ஷன் பிக்பாஸ் வந்த காலத்திலிருந்து பல சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்தார். அந்த வகையில், இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது.
இப்படியாக பல சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்த நிக்ஷன் குறைவான வாக்குகள் பெற்று நேற்றைய தினம் வெளியேறியுள்ளார். சுமாராக 91 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்த நிக்ஷன் ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.
ஒரு எபிசோடிற்கு ரூ. 13 ஆயிரம் என்ற கணக்கில் 90 எபிசோட்களுக்கு ரூ. 11, 70,000 சம்பளமாக நிக்சன் வாங்கியுள்ளார் என தெரிகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது. “ இவ்வளவு சம்பளமா?” என ரசிகர்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |