மைனா நந்தினியின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தனியின் ஒரு நாள் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் செல்கிறது. இதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
கடந்த சீசன்களை விட இந்த சீசன் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு ஏற்றால் போல் அசீம், தனலெட்சுமி மாத்திரமே விளையாடிக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் இல்லாவிட்டால் பிக் பாஸ் ஓடாது எனவும் ரசிகர்கள் கடந்த மேடைகளில் தெரிவித்திருந்தார்கள்.
இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு புகழ், பணம் என இரண்டு நன்மைகள் இருக்கின்றன.
அந்தவகையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.
வைரலாகும் வீடியோ காட்சி
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் மைனா, மணி, தனலெட்சுமி ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, “அதற்கு மணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி செய்வதாக” என்று தனலெட்சுமிடம் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் “பிக் பாஸ் டைட்டில் வின்னர் பரிசு தொகையே 50 வட்சம் தான் ஏன் பொய் வதந்திகளை கிழப்புகிறீர்கள்” என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
#Myna ku oru naalaiku 1.5 latchamaa???#Dhana shocked and we too#Biggbosstamil6 pic.twitter.com/QResalPCfz
— Aadhik Sri (@aadhik_vet09) December 8, 2022