பிக்பாஸ் தமிழ் சீசன் 6: Logo-வை வெளியிட்ட பிரபல டிவி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் லோகோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் பலரும் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.
பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.
ஐந்து சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள், படங்கள், சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.
பிக்பாஸின் புதிய Logo
ஆறாவது சீசன் குறித்த முதல் ப்ரோமோ சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்நிகழ்ச்சியில் இந்த சீசனில் பொதுமக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆறாவது சீசனுக்கான லோகோவை அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.
இந்த சீசனையும் கமல் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.