கடைசி நாமினேஷனில் காதலர்களிடையே அரங்கேறிய விரிசல்! பரபரப்பான ப்ரொமோ
பிக்பாஸ் வீட்டில் நேற்று ரச்சிதா வெளியேறிய நிலையில், இன்று நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் சென்றுள்ளது.
ஷிவின் கதிரவன் சண்டை
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். இதில் அமுதவானன் டிக்கெட்டை வென்று நேரடியாக ஃபைனலுக்கு சென்றுள்ளார்.
நேற்றைய தினம் ரச்சிதா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இன்று அரங்கேறிய நாமினேஷனில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அசீனுக்கு தனது வாக்கினை அளித்து நாமினேட் செய்ததை முதல் ப்ரொமோ காட்சியில் பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் அமுதவானனை தவிர, ஷிவின், அசீம், மைனா நந்தினி, விக்ரமன், கதிரவன் என அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷிவின் மற்றும் கதிரவன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஷிவின் மற்றும் கதிரவன் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருப்பதாக பேசப்பட்ட நிலையில், இந்த வாக்குவாதம் ரசிகர்களிடையே சற்று அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.