கோலி சோடா படத்தில் நடித்த ATM தானா இது? காணொளியை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்
கோலி சோடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சீதா, சமீபத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
நடிகை சீதா
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சீதா.
கோலி சோடா படத்தின் வாய்ப்பு கிடைத்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது, “உன் மூஞ்ச எல்லாம் எப்படி செலக்ட் பண்ணாங்க“ என்றெல்லாம் கமெண்ட் அடித்துள்ளார்கள் அவரின் நண்பர்கள்.
பல அவமானங்களை கடந்து இந்த கதாப்பாத்திரம் இன்று வரையில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கும் வகையில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அதனை தொடர்ந்து விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான 10 என்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடித்த சார்லின் சாப்ளின் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நீண்ட காலமாகவே சினிமாவில் தலைக்காட்டாமல் இருக்கும் சீதா தொடர்பில் இணையவாசிகள் தேடலை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் புட்டி கண்ணாடியுடன் ஒல்லியாக இருந்த சீதா சமீபத்தில் வெளியிட்ட ரீல்ஸ் காணொளியொன்று இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |