Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா
Bigg Boss Lakshmi Priya Join Family: பிக்பாஸ் வீட்டிற்குள் லக்ஷ்மி பிரியாவின் பெற்றோர்கள் வந்த நிலையில், அவர்கள் வீட்டிலிருந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது குடும்பத்தினர் போட்டியாளர்களை காண்பதற்கு வருகை தந்துள்ளனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற கடித டாஸ்க் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஏனெனில் உள்ளே 8 போட்டியாளர்கள் உள்ள நிலையில் நான்கு போட்டியாளர்களின் கடிதம் தான் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

இதையும் பிக்பாஸ் டாஸ்க் ஒன்றினைக் கொடுத்து தான் தீர்மானித்தார். அந்த வகையில் முனியம்மா, ப்ரித்வி, ஜேசன் இவர்கள் கடிதத்தினை தீயில் எரிக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது 77 நாட்களைக் கடந்து செல்லும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்றைய தினம் டிடிஎஃப் மற்றும் அன்சர் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்த வாரம் நாமினேஷன், டாஸ்க் எதுவும் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
தற்போது மக்கள் இதுவரை எதிர்பார்த்த Freeze Task இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இந்த சீசனில் Freeze Task என்று வைக்காமல் சாதாரணமாகவே நடைபெற்று வருகின்றது.
இதில் வினோத் மற்றும் லக்ஷ்மி பிரியா இவர்களின் உறவினர்கள் வந்தனர். இந்நிலையில் லக்ஷ்மி ப்ரியா தனது கதையை கூறும் போது 8 ஆண்டுகள் பெற்றோரை பிரிந்திருப்பதாக கூறினார்.

தற்போது வீட்டிற்கு வந்த பெற்றோர் லக்ஷ்மி பிரியாவிடம் மன்னிப்பு கேட்டதுடன், இனி நீ எங்கும் போக வேண்டாம்... என்னுடனே இரு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து லக்ஷ்மி தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |