Bigg Boss 10: வீட்டிற்குள் வந்து விஷத்தை விதைத்த உறவினர்கள்! குழப்பத்தில் போட்டியாளர்கள்
Bigg Boss Contestant Relation Entry: பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்துள்ள நிலையில், அறிவுரை என்ற பெயரில் விஷத்தை செலுத்துகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்களின் வீட்டிலிருந்து கடிதம் வந்துள்ளது. அந்த வகையில் முனியம்மா, ப்ரித்வி, ஜேசன் இவர்கள் கடிதத்தினை தீயில் எரிக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது 77 நாட்களைக் கடந்து செல்லும் பிக்பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடந்த வாரத்தில் ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்றைய தினம் டிடிஎஃப் மற்றும் அன்சர் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
தற்போது மக்கள் இதுவரை எதிர்பார்த்த Freeze Task இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இந்த சீசனில் Freeze Task என்று வைக்காமல் சாதாரணமாகவே நடைபெற்று வருகின்றது.
முதல் ப்ரொமோ காட்சியில் வினோத் மனைவி, அம்மா, மகன் உள்ளே வந்துள்ளனர். இதில் வினோத்தின் மனைவி தனது கணவருக்கு தேவையான அறிவுரையை மட்டும் கூறினார்.

மற்ற போட்டியாளர்களின் குணத்தினை எதிர்மறையாக எதுவும் கூறாமல் பேசினார். இரண்டாவது ப்ரொமோ காட்சியில் லக்ஷ்மி ப்ரியாவின் பெற்றோர் வந்துள்ளனர்.
லக்ஷ்மியின் அம்மா அறிவுரை கூறுவது போன்று சக போட்டியாளர்களைப் பற்றி விஷமாக சில கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இங்கு யாரையும் நம்பாதே என்றும் கூறியுள்ளனர்.