அதிரடியாக வெளியாகும் முதல் குறும்படம்! மன்னிப்பு கேட்டு வெளியேறுவாரா போட்டியாளர்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இன்று முதல் குறும்படத்தினை வெளியிட்டு பிக்பாஸ் வீட்டு குழப்பத்தை தீர்த்து வைக்க உள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கிடையே அதிகமாக நிலவி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் அனைவரிடையே கடும் சண்டையை ஏற்படுத்திய நிலையில், அசீம் மற்றும் தனலட்சுமி இடையே பயங்கரமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிலையில் அசீமின் நிலை என்ன என்றும் தனலட்சுமி பிரச்சினைக்கு என்ன தீர்வு கொடுக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
தனலட்சுமி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருக்கும் நிலையில், கமல்ஹாசன் அவருக்கு குறும்படம் போட்டு காட்டப்போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.