போர்வைக்குள் கட்டியணைத்து முத்தமிட்ட ஜோடி! எல்லை மீறி சென்ற பிக்பாஸ்: அதிர்ச்சி புகைப்படம்
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிகள் போர்வைக்குள் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பிக்பாஸ்
தமிழில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினைப் போன்று தெலுங்கிலும் தற்போது பிக்பாஸ் சீசன் 6 சென்று கொண்டிருக்கின்றது.
தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் நிலையில், ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர். தமிழ் பிக்பாஸில் இரண்டு பேர் வெளியேறிய நிலையில், தெலுங்கு பிக்பாஸில் 6 பேர் வெளியே சென்றுள்ளனர்.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி தொடங்கிய நிலையில் இதிலும் 21 பேர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது 6 பேர் வெளியேறியதால் 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.
எல்லை மீறிய ஜோடி
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மெரினா மற்றும் ரோகித் தம்பதிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் போர்வைக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதனை அவதானித்த சக போட்டியார்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், குறித்த சம்பவம் குறித்து நடிகர் நாகர்ஜுனா என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.