பிக்பாஸில் போட்டியாளர்களின் பரிதாபநிலை! கமலின் கொந்தளிப்பு எதற்காக?
பிக்பாஸ் வீட்டில் தியாகம் செய்கின்றேன் என்று விக்ரமன் மற்றும் ஏடிகே மீசை மற்றும் தலைமுடியை இழந்துள்ளது ப்ரொமோ காட்சியில் வெளியாகியுள்ளது.
மீசையை இழந்த விக்ரமன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.
கடந்த வாரத்தில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்த வாரம் பொங்கல் பண்டியையைக் கொண்டாட பிக்பாஸ் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
மேலும் கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு வெளியில் வந்த விருந்தினர்களால் சில டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் விக்ரமன் மற்றும் ஏடிகே இருவரும் தங்களது மீசை மற்றும் முடியை இழந்துள்ளனர்.
இதனை போட்டியாளர்கள் விரும்பி செய்தார்களா? கட்டாயப்படுத்தி செய்யக் கோரினார்களா? அல்லது பழி தீர்க்க இது நடந்ததா என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.