பொய் சொல்லும் விக்ரமன்: பழைய சம்பவத்தை கிளறி சண்டையிடும் சாந்தி
விக்ரமன் முன்னதாக பேசிய விசயத்தை வைத்து தற்போது சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் விக்ரமன்
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்தவர்தான் விக்ரமன், ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று விளையாடிய விக்ரமன் நாட்கள் போக போக டைட்டில் வின்னர் ஆகும் அளவிற்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன். இதனால் தான் அசீம் மற்றும் விக்ரமன் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.
மீண்டும் நுழைந்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக மாற்ற நிறைய ஜாலியான விளையாட்டையும் வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகக் கொண்டுப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், விக்ரமன் குறித்து சாந்தி பேசும் விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. அந்தவகையில், பிரபலமான போட்டியாளராக இருந்த தனலட்சுமி, வெளியே போன பிறகு விக்ரமன் முன்பு நடித்த சீரியலை பார்த்ததாகவும் அவர் சிறப்பாக நடித்திருந்ததாகவும் குறிப்பிட்டு பாராட்டி பேசியிருந்தார்.
அந்த நேரத்தில், விக்ரமன் முன்பு நடித்துள்ளது பற்றி அறிந்ததும் விக்ரமனிடம் பேசிய சாந்தி, "என்கிட்ட என்ன சொன்னீங்க, எனக்கு நடிக்கவே தெரியாது. நான் நடிச்சதே இல்லன்னு சொன்னீங்க" எனக்கேட்டார்.
இதற்கு பதிலளித்த விக்ரமன், நான் நடித்ததே இல்லை என சொல்லவில்லை என்றும் தனது விளக்கத்தையும் கொடுக்க, இல்லை நீங்கள் சொன்னதே இல்லை என்றும் மறைத்து விட்டீர்கள் என்றும் சாந்தி தனது கருத்தில் நிலையாக இருந்தார்.
இது இவர்கள் இருவருக்கிடையில் சிறிய வாக்குவாதம் போல மாறியது.