வெளியில் வந்தவுடன் கூட்டணி சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள்.. யார் யார்ன்னு தெரியுமா?
வெளியில் வந்தவுடன் ஜோவிகாவுடன் கூட்டணி சேர்ந்த பிக்பாஸ் பிரபலத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியானார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டிகள் கொஞ்சம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
ஜோவிகா இணையும் பிராவோ
இதனை தொடர்ந்து வெளியில் வந்த ஜோவிகா தன்னுடைய அம்மாவுடன் இணைந்து வேலை பார்த்து வருகிறார்.
அத்துடன் நடிகர் பார்த்திபனுடன் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இப்படியொரு நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்.ஜே பிராவோவை சமிபத்தில் ஜோவிகாவை சந்தித்துள்ளார்.
இதன் போது இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள், “ வெளியில் வந்துவுடன் கூட்டணியா? என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |