காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து கரம் பிடித்த சீரியல் நடிகை சங்கீதா...குஷியில் ரசிகர்கள்
தொழிலதிபர், டான்ஸர், காமெடி நடிகர் என பன்முகத் திறமையோடு விளங்கும் ரெடின் கிங்ஸ்லி, தனது 46 ஆவது வயதில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி
ஒரு டான்சராக திரையுலகில் பணியாற்றிய ரெடின் கிங்ஸ்லி, பின்னர் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான பிஸ்னஸ் ஒன்றையும் செய்து வருகிறார்.
எனினும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்த நிலையில், இவரை இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.. தான் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைத்தார்.
அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பகள் ரெடின் கிங்ஸ்லி கிடைத்தது. இதை எடுத்து எல்கேஜி, குர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர், மார்க் ஆண்டனி , என அடுத்தடுத்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் ஒருவராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம்பிடித்துள்ளார்.
சங்கீதா 'மாஸ்டர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துளளார். மேலும் பல சீரியல்களில் நடித்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்த ராகம்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |