அப்போ சீக்ரெட் அறையில் இல்லையா? நேரலையில் அனுபவம் பகிரும் ஜோவிகா- அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சீக்ரெட் அறையில் இருப்பதாக கூறப்பட்ட ஜோவிகா நேரலையில் தோன்றி காட்சி இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் குறைவான வாக்குக்களை பெற்று நேற்றைய தினம் வனிதாவின் அன்பு மகள் ஜோவிகா வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேரலையில் சிக்கிய ஜோவிகா
வெளியேறிய பின்னர் பேசிய வனிதா, “ தன்னுடைய மகள் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும் அதுக்கான அழைப்பு கூட வரவில்லை எனவும் பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து ஜோவிகா சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டுள்ளார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என கூறப்பட்டது.
இப்படியொரு சர்ச்சை கிளம்பிய நிலையில், இன்றைய தினம் வனிதா கொடுத்த நேரலையில் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனை பார்க்கும் பொழுது சற்று வேடிக்கையாக உள்ளது.
சீக்ரெட் அறையில் வைக்கும் அளவிற்கு ஜோவிகாவிடம் கண்டன் இல்லை என விமர்சகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |