நாமினேஷனில் ஏற்பட்ட டுவிஸ்ட்.. அப்ஷன் இல்லாமல் தவிக்கும் நிக்ஷன்- பரபரப்பான ப்ரோமோ
பிக்பாஸ் வீட்டில் தனியாளாக நாமினேஷனில் சிக்கிய போட்டியாளரின் விவரங்கள் ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கின்றது.
ஒற்றை ஆளாக சிக்கிய நிக்ஷன்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் நாளான இன்று நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் அதிகமான வாக்குகளை பெற்று நாமினேஷனில் நிக்ஷன் மாத்திரம் தெரிவாகியுள்ளார். இதனை பிக்பாஸ் கலாய்க்கும் வகையில் அறிவித்துள்ளார்.
நாமினேஷனில் கூட அப்ஷன் இல்லையா? என இந்த வாரம் நிக்ஷன் வெளியாவது உறுதி என கூறப்படுகின்றது.
மேலும் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறாவிட்டால் ஒற்றை ஆளாக நிக்ஷன் வெளியேறுவார் என போட்டியாளர்கள் குஷியில் சுற்றி தெரிகிறார்கள்.
அத்துடன் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |