அடுத்த லாஸ்லியாவாக மாறிய விஜயின் மகள்! ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம்
மார்டன் ஆடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டு இலங்கை குயின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் ஜனனியின் பின்னணி
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.
அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.
ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
மார்டன் ஆடை
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் நாளுக்கு ஒன்று வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மார்டன் ஜீன்ஸ் அணிந்து அதற்கு கருப்பு நிற மேற்சட்டை அணிந்து போஸ் கொடுப்பது போன்ற புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் பார்க்கும் போது அடுத்த லாஸ்லியா போல் மாறி கொண்டு வருகிறார் ஜனனி என்பது போல் இருக்கிறது. இதனையே ஜனனியின் ரசிகர்கள் கருத்துக்களாக பதிவு செய்து வருகிறார்கள்.