இலங்கை தமிழை ரசிக்கும் கமல்! தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்களுக்கு தெரியாத விஞ்ஞானமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக கமல் பங்கேற்கும் வார இறுதி எபிசோட் இன்று ஒளிபரப்பானது.
இதில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் கூறிய தங்களின் கதை பற்றியும், அதில் இருந்து கற்க வேண்டிய பாடம் பற்றியும் கமல் விளக்கம் அளித்தார்.
இதில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட மதுமிதாவிடம் பேசிய கமல், உங்கள் வட்டார மொழியை கிண்டல் செய்வார்கள் என பேசாமல் இருக்காதீர்கள்.
நான் உட்பட்ட பலர் அந்த மொழியின் ரசிகர்கள் தான். எந்த படிப்பாக இருந்தாலும் நமது தாய்மொழியில் படிப்பதை விட வேறு எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடியாது.
விஞ்ஞானத்தை தமிழில் படிக்க முடியாது என சிலர் கூறுகிறார்கள். தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்களுக்கு தெரியாத விஞ்ஞானமா நமக்கு தெரிந்து விட போகிறது.
என்ன இவர் தமிழ், தமிழ் என்று பேசுகிறார் என நினைக்காதீர்கள். தமிழ் மொழி பற்றி பேசுவதில் எந்த அரசியலும் இல்லை.
மொழி பற்று மட்டும் தான். அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.