லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகர்? இவர் தானா அது? வெளிவந்த புகைப்படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
இத் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு திரைப்பட்டாளமே நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் லியோ குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் படக்குழுவினர் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.
அவர்களுடன் சேர்ந்து நடிகர் கதிரும் வெளியேறினார். ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் பிகில் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் லியோ படத்தில் அவர் நடிப்பதாக எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில், தற்போது லியோ படக்குழுவினருடன் நடிகர் கதிர் தங்கியிருப்பது அவர் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளது.