உடல் எடை அதிகரித்த ஜனனி! பிக்பாஸில் வாங்கிய சம்பளம் என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சம்பளம் குறித்த கேள்விக்கு நடிகை ஜனனி பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் ஜனனி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் தான் இலங்கை பெண் ஜனனி.
ஜனனி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே அவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டது. பின்பு தனது பேச்சுத்திறமையினால் அனைவரையும் கவர்ந்தவர், அமுதவானனுடன் சற்று அதிகமாகவே சுற்றி வந்தார்.
குறித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில், இதன் வெற்றியாளராக அசீம் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து இந்தியா வந்து பிக்பாஸில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார்.
சம்பள உண்மையை உடைத்த ஜனனி அளித்துள்ள புத்திசாலித்தனமான பதில் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. அதில், "உங்களோட பிக்பாஸ் சம்பளம் எவ்வளவு?. எத்தனை நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்தீங்க?" என கேளவி கேட்ட கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜனனி, "73 நாட்கள் இருந்தேன்". என பதில் அளித்தார். மேலும் சம்பளம் குறித்து பேசும் போது, "என்னனு இங்க சொல்ல முடியும்?. அதெல்லாம் கம்பெனி ரகசியம் ஆச்சே" என கூறி சம்பளம் குறித்த தகவலை கூற மறுத்து டாஸ்கை ஜனனி நிறைவு செய்துள்ளார்.