மற்றுமொரு திரைப்படத்தில் கமிட்டாகிட்டாரா இலங்கை பெண்? விமர்சகர்கள் கையில் சிக்கிய புகைப்படங்கள்..
இலங்கை பெண் ஜனனி புதிய திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீடியாத்துறை பயணம்..
இலங்கையை பிறப்பிடமாக் கொண்டு தற்போது இந்தியாவை கலக்கி வரும் பிக்பாஸ் பிரபலம் தான் ஜனனி.
இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
மீடியாத்துறையிலுள்ள ஆர்வத்தினாலும் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காகவும் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஜனனியை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது அந்தளவு ஜனனியின் பெயர் இந்தியாவில் பிரபலமாகி விட்டார்.
மற்றுமொரு திரைப்படத்திற்கு கமிட்டாகிட்டாரா ஜனனி?
இந்த நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து ரீல்ஸ் வீடியோக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஜனனி தற்போது புதிய ஆல்பம் பாடலொன்றில் கமிட்டாகியுள்ளதாகவும், இதற்காக பூஜைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“ மற்றுமொரு திரைப்படத்தில் கமிட்டாகி விட்டாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.